Tuesday, December 14, 2010

Nice one!!

மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்!!!

நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!




இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


Wednesday, December 8, 2010

அவன்.. அவள்.. அது..

சந்திரனின் வேளை!! மேகங்கள் விண்ணை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தன..
வீட்டுப்பாடங்கள் புத்தக பை போர்வைக்குள் முடக்கம் கொண்டன..பரபரப்பான தார் சாலைகள் பாலைவனகளாகும் இரவு பொழுது..
ரம்மியமான தென்றல் காரிருளின் மௌனத்தை கிழித்து கொண்டு..மழை மேகங்கள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி குளிர்ந்த காற்றை அறிமுக செய்ய தொடங்கின.. அவனோ அந்நாளின் வரலாற்றை டைரியில் செதுக்கலானான்..ஆண் காற்று ஒன்று திரைசீலையை மெல்லமாய் வருட வெட்கப்பட்ட சீலையோ ஜன்னலருகே ஒளிந்து கொண்டது..இவர்கள் விளையாட்டுக்கு இடையில் சிக்கி கொண்ட மயில்தோகை ஒன்று அவன் அருகில் வந்து அமர்ந்தது!!நினைவுகள் ததும்ப...
பயணகள் பின்னூட்டமாய்.....

அவன் : பகல் மெலிந்த மாலை பொழுது... பேருந்து நிலையத்தில்..
என்றுமில்லாத திருநாளாய் பதுமைகள் கூட்டம்...
ஈர்ப்புவிசை இன்று மட்டும் தன்னிலை மாறி வலது நோக்கி..
காற்றின் வேகம் தாங்காமல் சிறகடித்து கொண்டு இருந்த
மயில்தோகை ஒன்றை பட்டு விரல்கள் தொட்டு விட துரத்தி கொண்டு இருந்தன
20வயது குழந்தை இதுவரை இவள் போல் கண்டதில்லை..
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.. தொகைக்கும் குடுத்து வைக்கவில்லை அவள் தொட.நேரம் நகர பேருந்தும் நகர்ந்து வந்தது..கிட்டாமலே தொலைத்து போனால்..பின் முதல் காதல் பரிசாய் ...அது போன்று ஆயிரம்....தொலைத்தது டைரியில் இன்று இவனுடன்..

தென்றல் திரட்டிய மேகங்கள் சாரலாய் தெளித்து
அவள் தூக்கம் கலைத்தது...


அவள்: மழைக்கும் அவள் தொலைபேசிக்கும் சின்னதாய் ஒரு ஒற்றுமை..சாரல் அடித்தால் அவள் தொலைபேசியும் கவனம் ஈர்க்கும்..அவன் அழைப்பு... மழை நின்றாலும் உரையாடல்கள் என்னவோ மறு நாள் காலை வரையில்...இன்று ?

இப்படியாய் நினைவுகள் உரையாடி விவாதித்து தங்களாய் முறையிட்டு வாழ்ந்து விளையாடி கோபித்து போராடி நிலையிழந்து ததும்பி தங்களுக்குளே அடங்கி போயின..

பேய்மழையும் கெர்சித்து ஒடுங்கி போனது.. இறுதி துளி நீராய் தலையைனை நனைத்தபடி உறங்கிப்போனது!!

இரவோடு ஓர் மழைக்காலம்!!!