Wednesday, January 6, 2010

நேரம் இருந்தது !!!








என் விரல்களுக்கு
நேரம் இருந்தது
உன்னை பற்றி
புகழ...

என் கால்களுக்கு
நேரம் இருந்தது
உனக்காக
காத்திருக்க...

என் கண்களுக்கு
நேரம் இருந்தது
உனக்காக கண்ணீர் சிந்த ....

என் இதயத்திற்கு
நேரம் இருந்தது
உன்னை மட்டும் நினைக்க

என் கடிகாரத்துக்கு
நேரம் இருந்தது
நீ எனோடு இருந்த
நேரத்தை கணக்கிட ...

என் இரவுகளுக்கு
நேரம் இருந்தது
உன் அருகாமையை உணர..
கனவில் மட்டும்....

ஆனால்
ஏனோ
உனக்கும் நேரம் இருந்தது
என் காதலை மறுக்க...

-->sahana

1 comment: