Tuesday, December 14, 2010

Nice one!!

மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்!!!

நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!




இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.


2 comments: