Friday, September 25, 2009

Music is love!!

காற்றை அழைத்து வர சொன்னேன்!!
என் வீடு ஜன்னலிடம்!!
அது
காதலை அழைத்து வந்தது!!
இசையை காதலிக்காதவர்கள்
எவரேனும் உள்ளரோ??

-sahana

en varugai!!

உன் தலை முடி கோதிட
காற்றாய் வருகிறேன் அன்பே!!
கண்ணயர்ந்து விடாதே!!
கனவுகளை கலைக்க
காற்றுக்கு உரிமை இல்லை..
-sahana

nilalana naan!!

எல்லோரும் அம‌ர்ந்திருக்கும்
அந்த‌க்கூட்ட‌த்தில்
என்னை ம‌ட்டும்
பார்த்துக்கொண்டிருந்த‌ன‌
அந்த‌ இருவிழிக‌ள்.

த‌ன‌க்கான‌ பார்வையை
என்னிட‌மிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த‌ விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இய‌ல்பாய்
த‌விர்த்தேன்.

எல்லோரும் க‌லைந்து
சென்ற‌ன‌ர்.
வ‌ருட‌ங்க‌ள் ப‌ல
க‌ழிந்த‌பின்ன‌ரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
த‌விர்த்த அந்த‌விழிக‌ளை.

padithathil pidithathu!!

நடுநிசியில் தெருவோர
மரத்தடியில் உறங்குகின்ற
பைத்தியக்காரி
மார்போடு அணைத்திருந்தாள்
பொம்மையொன்றை.
அவளுக்கு பிறக்க
இயலாமல் போனதற்காய்
அப்பொம்மை அழுத
கண்ணீர்தானோ
இந்த இரவுமழை?

a pleasant rain time!!

சிலுசிலுன்னு காத்து..
கனவு மாதிரி கலைஞ்சு போற மேகம் !!
போன நொடி பூத்த பூவ
தொட்டு பாக்கவே வந்து போற சாரல் மழை ...
நனஞ்சுருவோமொனு கொஞ்ச கூட பயப்படாம
சிறகு அடிச்சு பரகுற சிட்டுகுருவி...
இதெலாம் பாத்து சூரியனே கண்ணா மூடி நிக்குரபோ
நம்ம மட்டும் என்ன?
Never miss the beauty of NATURE!!!
Life is damn beautiful..

- sahana

Monday, September 21, 2009

u may be anything!! but i m wat i am...

விண்ணில் பல மாற்றம் ஏற்படலாம்
சூரியன் சுருங்கி போகலாம்...
பகல் நிலவுடன் உலா வரலாம்..
வானிலை மாற்றம் காணலாம்..
மேகங்கள் மலராய் மணம் பரப்பலாம்
நீல வானம் என்றும் நிலையானது!!
நினைவுகள் தடம் புரண்டாலும்..
பெண்மை நிலையானது!!
-sahana

I did too!!

இரண்டு முறை மட்டுமே உன்னை காதலித்தேன்..
ஒன்று!
என் தந்தை காதல் கதை ஒன்றுக்கு
சபாஷ் என்ற பொழுது..
மற்றொன்று!!
உன்னோடு நான் வாழ்ந்தத்தாய்
கனவு கண்டு எழுந்த பொழுது!!

-sahana!!

Thursday, September 17, 2009

Love!!

உன்னுடன் நான்!!



வார்த்தை பரிமாற்ற உன் நட்பு ..
அன்பு பரிமாற்ற உன் காதல் !!
முகம் பார்க்க உன் விழிகள்...
முகம் புதைத்து அழ உன் தோள்!!
என்றும் விலகாத உன் அருகாமை !!
இவை அனைத்தும் என் இறுதி வரை !!!

-Sahana

Friday, September 4, 2009

ரசித்ததில் சில

எதற்கு காதலர் தினம்...



நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..

நீ பார்த்து புன்னகை செய்த நாள்..

உன்னோடு கைக்குலுக்கிய நாள்..

பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..

செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..

நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..

எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..

மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..

உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..

என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..

அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..

எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..

காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..

தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..

நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..

இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..

காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..

உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..

இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..

முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..

செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..

என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..

இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..

தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..

வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..

இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..

நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"

முகம்..

நீ நூலகம்
செல்கையில்
நானும் நூலகம்
வருவது,
சத்தியமாய்
உன் முகம் படிக்க மட்டுமே..

--நிலாப்பெண்..

வாசகி தானே?

உனை வாசித்தப்பின்
முறையாய் நான்
வாசகி தானே?
எனை எப்படி
கவிஞர் ஆக்கினாய்?

--நிலாப்பெண்

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

நிலவாம் நிலவு...





வட்டப் பொட்டு
வச்சாத் தான்
உனக்கு பிடிக்கும்னு
நான் வச்சேன்..
இருட்டினதும்,
ஈனச்சிறுக்கி
வானமும்
வட்டப்பொட்டோட
நிற்கிறாளே

--நிலாப்பெண்..