.

சாரல் மழை அழகு!!
அடைமழை தூரத்து அழகு...
காலையில் மழை பனித்துளி
நண்பகலில் மழை கவன சிதறல்
நடுநிசியில் மழை கையில் கிடைக்கும் சொட்டு நிலா..
காற்றுக்கு மழை வேகத்தடை
கடலுக்கு மழை ஷவர் குளியல்...
மலைகளுக்கு மழை உரம்..
மனதுக்கு மழை சுகமான ராகம்!!
கவிக்கு மழை தன்னை
பற்றி எழுத தானே வந்த மயங்கடிக்கும் மை
ஓவியனுக்கு மழை இயல்பாய் சித்தரிக்க முடியாத
எட்டா கனி...
காதலர்களுக்கு ஒருகுடை பயணத்திற்கான
பயண சீட்டு...
விவசாயிக்கோ "விளைஞ்ச கொஞ்சத்தையும்
அள்ளிட்டு போயிடுமோ??" என்ற பயம் !!
குழந்தைக்கு முதல் துளி தாயின்
முந்தானை வாசனை...
இரண்டாம் துளி அவளின்
கார பார்வை.... வீட்டுக்குள் அழைக்க
கிழவிக்கோ " எப்பதான் பெஞ்சு ஓய"" சலிப்பின் சுவாசம் !!
ஆனால் இவளுக்கோ மழை
சத்தமா ???? சங்கீதமா???
---குருட்டு சிறுமி..
nice one!
ReplyDeletelast line made this one quite heavy!
hmmm..kool..tk yu!!
ReplyDeletea different aspect of a girl.............
ReplyDeleteeven if she is blind..........a drop is a deep thought for her
really nice
ReplyDelete