Wednesday, December 23, 2009

நம் சந்திப்பு..






மாலை
எனை மயங்கடித்து
கொண்டு இருந்த வேளை..
தண்ட வாளத்தின்
எதிர் எதிர் கோடுகளை போல...
நம் பயணம்..

களையிழந்த முகம்...
கலைந்த கூந்தல்..
இருபினும் அவள் அழகி தான்..
அவனுக்கு..

தனை கவர்ந்த
காந்தம் இல்லை கண்களில்..
எனினும் அவள் பார்வை தான்...
அந்த சில நிமிடங்கள்.. தான்.
அவன் முழுதாய் வாழ்ந்ததாய்
உணர செய்தது..

உழைப்பின் அசதியா ??
கல்வியின் செழுமையா??
அதனை களைப்பு
அந்த கண்களில்...

இவையெல்லாம் வெள்ளமாய்
எண்ணத்தில் பாய...
அவளை பார்த்த படியே...

நெடுக செல்லும் சாலையில்..
அவன் வீடு மட்டும் ஏன்
இவ்வளவு அருகில்??

அந்நாளின் கடைசி பார்வையை
நிமிடங்களை சுமையாக்க
இனி எப்படி?? முடியுமா??
என்ற ஏக்கங்களின்...
கடைசி பக்கத்தில்...
இருந்த போது...

அண்ணா...
என்று சத்தம் போட்ட
பக்கத்து வீடு குழந்தை...
கையில் அள்ளிய படி...
பார்வையை அவள் போகும் திசையில்
தொலைத்து விட்டு.....


----->sahana

1 comment:

  1. oru naalin kadaisi parvaiku weightttttt jasthiiii thann!!!

    alaga solirukaa!!

    ReplyDelete