Wednesday, January 6, 2010

உன்னை மறக்க .....





அவள் உனதில்லை
நீ எனது இல்லை...
என பல ஆயிரம்
முறைகள் எனை திருத்தியும்
என் சொற்களில் படிந்து போன
உன் நினைவுகள்..


உன் கண்களில்
மோதி விட கூடாது
என்று எவ்வளவு முயன்றாலும்
இருனதியில் சரணடைவது என்னவோ
உன் விழி ஆலயத்தில் தான்..

குப்பைக்கு சென்றாலும்
மணம் வீசும் பூவை போல நானும்...
விதி யாரை விட்டது..
எனினும்
உன் விழி உன்னை விடாது..

உன் பேர் சொல்ல ஆசை தான்..
ஊருக்கெல்லாம் மேடை போட்டு அல்ல..
எனக்கே கேட்காமல்....
செல்லமாய் ...
ரகசியமாய்...

உன் தோள்களில் தேய ஆசை தான்...
வாழ்நாள் முழுக்க அல்ல...
என் கண்ணீரின் முதல் சொட்டு
உன்னை நனைக்கும் வரை மட்டுமாவது..
இவைகளுக்கு பிறகும்
எங்கனம் உன்னை மறக்க?????

-->sahana

1 comment: