Friday, October 29, 2010

பிரிவு

பிறப்பில் தாயிடம்
பிரியும் குழந்தைக்கு
பிரிவு
'தன்னை' தந்தது..

மேகத்திலிருந்து பிரிந்த
மழை
மண்ணிருக்கு ஜீவனை தந்தது..

எனினும்
நீ பிரிந்த போது
நானும் பிரிந்தேன்..
மண்ணை விட்டு ..
எனக்கு 'தன்னை' தந்த
தாயின் பாசத்தையும் பிரிந்து...
தொடரும்...

வறுமை

வறுமை
இதன் அர்த்தம்
பிள்ளைகளின் புத்தகத்தில் இல்லை
பிச்சைகாரர்களின் கண்களில்..

வறுமை
அதன் நிறம் சிவப்பாம்
ஒத்துகொள்ள தான் வேண்டும்..
எங்கள் ரத்தத்தை வாங்கும்
நரகாசுரனை...

வறுமையை
போக்கும் பயணத்தில்
எங்கள் விவசாயிகளின்
வறுமை கோட்டை மட்டுமாவது
அழிக்க கொண்டு வாருங்கள்
சிறுதளவு காவிரி தண்ணீரை..

மழை காலம்!!!

கவிதை எழுத முற்பட்டேன்!! எனினும் கவித்துவம் கருணை காட்டவில்லை....
"கவிதையா???" கேட்டு முடிப்பதற்குள் , " நீ என்னோடு இருக்க போகும் இந்த சில நிமிடங்கள் தான் கவிதையாக போகிறது!! " என்றாய்... AI class in algorithm போல புரியாமல் கடந்தேன்..மனதை மயக்கும் வேளை!!! வீதி எங்கும் மலரின் ஸ்பரிசம்.. மழை நனைக்காமல் நனைத்து இருந்தது சாலையை... நம்மையும் கூட தான்!! உன் அருகாமை, கொட்டும் மழையில் சிலிர்ப்பூட்டும் icecream போல...விர்ரென்று பறந்தது நாம் சென்ற Hunk... காற்று நம்மை விட வேகமாக!!!எனினும் என்னுள் மட்டும் ஏனோ மயான அமைதி... காரணம் எங்கோ காணாமல்!!! இமைகள் துடிக்க மறந்தன..எண்ணங்கள் நிற்க மறுத்தன!!! பயணமும் தொடர்ந்தது தடுமாற்றங்களுடன்.. " தொடரட்டுமே உன்னுடன் வாழ்க்கை பயணமாயும் . " என்ற என் மௌன உரையாடலுக்கு நடுவே..."இருக்கியா ???? பேசலாமே!!!" மௌனம் என்னை கடந்து சென்றது ஆமோதனையை எனக்கு தந்து விட்டு.. காரணங்கள் இல்லாத தருணங்கள் பல...அவற்றுள் ஒன்றாய் இதுவும்... என எண்ண அலைகள் விண்ணை நோக்கி ஆர்பரிக்க..
"எந்திரிச்சு தொல... மணி ஆகுது..." அம்மா அலாரம் சரியாய் அடித்தது முதுகில் !!!எந்திரிச்சதும் தான் தெரிஞ்சு " வட போச்சே "

Monday, October 18, 2010

இனி...


ஆசைகள் தொலைந்தன...
கண்டெடுக்க இயலவில்லை
ஏக்கங்களாக உருவகித்ததால்..
கால கழுகுகள் தின்று போட்ட
மிச்சமும் எச்சமும்
நினைவுகளாய் உயிர் ஓரத்தில்..
எதிர்பார்ப்புகளை விற்றுவிட
சில துளி கண்ணீரும்
பொய்யாய் சிரிப்புமே விலையாக கிடைத்தன..
நிறுத்த பட்ட ஆசையும்
நிறைவேறாத ஆசையும் என
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
புதைத்து விட்டு..
நான் நானாக
வாழ்வை வந்த படியே எதிர்கொள்ள...

Friday, October 1, 2010

தலைப்பு???






தண்ணீருக்கு வண்ணம் கொடுக்க...
நிலவையும் தூரலையும் ஒன்றாய் புகைபடம் எடுக்க...
தாஜ்மஹாலில் குடி ஏற...
காற்றும் சலங்கை அணிய...
மீசை இல்லா பாரதி பார்க்க..
கண்ணுக்குள்ளேயே கண்ணீர் அடங்க...
பிறந்ததும் குழந்தை தமிழில் பேச..
திருவள்ளுவனை எழுப்பி அவன் குரல் கேட்க..
கண்களுக்கும் பாஷை கற்று கொடுக்க...
குடைகளே இல்லாத உலகம் அமைக்க...
நினைத்தால் மறுபடியும் மழலையாக..
கனவுக்கெல்லாம் கைவிரல் கொடுக்க..
காதலுக்கும் கால நிர்ணயம் விதிக்க..
பிரிவுகள் இல்லா உறவுகள் அமைய..
அவன் குரலில் என் காதல் கேட்க..
ஆசை!!??!!!


-சஹானா.