Monday, August 30, 2010

எங்கணம் தவிர்க்க??????






நீ ஏற்படுத்தி போன
செல்ல நினைவுகள்
என் மனமேட்டில்
பாத சுவடுகளாய்
சத்தமிலாத சித்திரங்கள் போல..

என் ஜன்னல் ஓர பேருந்து பயணங்கள்
உன் நினைவுகளை என்
நியாபக அறையில் வந்து
தாழிட்டு செல்கின்றன!!!

நீண்ட மௌன நேரங்கள்
அனைத்தும்
நொடிக்கு ஒரு முறை
உன் பெயரையே
உரைத்து நகர்கின்றன
என் காதோரமாய்...

ஏன்
இயற்கையின் இயல்பான மழைத்துளிகள் கூட
நீ இட்ட முத்தத்திற்கே
போட்டியாய் நிற்கின்றன :)

இயற்கையும்
இயல்புமே
எனகேதிறாய்
செயல் பட...
நான் எங்கணம்
உன் நினைவை தடுக்க ...
சிறைபட்டே
கிடக்கட்டும்
உன் சிங்கார நினைவுகள்...

---- சஹானா

Tuesday, August 24, 2010

????????

அவன் சந்தோஷம்
ஒன்றே என் காதலின்
அர்த்தமாக இருந்தது அன்று..
இன்றோ சற்று வித்தியாசமாக..
சந்தோஷத்தின் துணையாக..
கண்ணீரும்..
சந்தோஷம்..அவன் உள்ளத்தில்..
கண்ணீர் கரை என் உள்ளத்தில்..
காதல்- காணவில்லை..


--->தோழியின் கவிதை

Saturday, August 21, 2010

ஓர் இரவு !!





இருளலூருக்கு வழியை தேடி
அனைவரும் கனவு பயணத்தை தொடர
நான் மட்டும் விழி அறையை
திறந்து கொண்டு
நினைவு படுக்கையில் தலை சாய்க்க
தருணம் தேடி கொண்டு இருந்தேன்....
அன்று தான் ஏனோ
நிலவும் உரையாட எண்ணி
என் அருகில் வந்து அமர்ந்தது
நிலவு... நான்.. நீ....
என் நினைவுகளில்!!!
என சுகமாய் பூத்திருந்தது என் அறை....

இரவும் மினுமினுக்கும் நட்சத்திரமும்
உன் கண்களை நினைவுட்ட...
நிலவையும் மறந்து நான்...
காதல் இயற்கையை கூட பிலையாகிற்று :)
எங்கிருந்தோ இசைந்த பாடல்
ஈரக்காற்றில் இதமாய்..
எனினும் நான் என் காதோரம்
உணர்ந்த உன் மூச்சு காற்று...
இன்றும் மெட்டு மாறாமல் நினைவூட்ட...

கரைய தொடங்கிய இரவில்
கறந்து போனது நானும் தான்!!
இறுதியில்
நினைவுகள் உலுக்க
நம் உலகில் உலாவி கொன்று இருந்தேன் நினைவில்...
அறையிலோ...
நிலவு என்னை உறங்க வைத்த களிப்புடன்
மேகத்தோடு கரம் கொண்டு நகர்ந்தது...
நானும் சில மணித்துளிகளில்
துயில்லூருக்கு பயணப்பட்டேன்...
உன் நியாபக பாதையில்...
- சஹானா