Wednesday, December 23, 2009

உன் நினைவுகள்...

உன்னோடு என் நாட்கள்..
ரோஜாவின் நறுமணமாய் மணம் வீசின...
ஆனால்..
இன்று..உன் நினைவுகள்...
சருகுகளாய்.. என் டைரியில்..

நம் சந்திப்பு..






மாலை
எனை மயங்கடித்து
கொண்டு இருந்த வேளை..
தண்ட வாளத்தின்
எதிர் எதிர் கோடுகளை போல...
நம் பயணம்..

களையிழந்த முகம்...
கலைந்த கூந்தல்..
இருபினும் அவள் அழகி தான்..
அவனுக்கு..

தனை கவர்ந்த
காந்தம் இல்லை கண்களில்..
எனினும் அவள் பார்வை தான்...
அந்த சில நிமிடங்கள்.. தான்.
அவன் முழுதாய் வாழ்ந்ததாய்
உணர செய்தது..

உழைப்பின் அசதியா ??
கல்வியின் செழுமையா??
அதனை களைப்பு
அந்த கண்களில்...

இவையெல்லாம் வெள்ளமாய்
எண்ணத்தில் பாய...
அவளை பார்த்த படியே...

நெடுக செல்லும் சாலையில்..
அவன் வீடு மட்டும் ஏன்
இவ்வளவு அருகில்??

அந்நாளின் கடைசி பார்வையை
நிமிடங்களை சுமையாக்க
இனி எப்படி?? முடியுமா??
என்ற ஏக்கங்களின்...
கடைசி பக்கத்தில்...
இருந்த போது...

அண்ணா...
என்று சத்தம் போட்ட
பக்கத்து வீடு குழந்தை...
கையில் அள்ளிய படி...
பார்வையை அவள் போகும் திசையில்
தொலைத்து விட்டு.....


----->sahana

Tuesday, December 22, 2009

நாளிதழ்




தினமும் காலையில் எழுந்தவுடன்
உன் முகம் காண்கிறேன்
சூரியனுக்கு முன்

உன்னிலோ பலமுகங்கள்
பலரது மோக மூடிகளை கிழிப்பவன் நீ
காலையில் நம்நாட்டு செய்தியை
கைக்குள் தரும் புது டெக்னாலஜி
மாலையிலும் வருவாய் என்னை தேடி

நீ லஞ்சத்தை பற்றி எழுதினாய்
உத்வேகம் பிறந்தது...
பஞ்சத்தை பற்றி எழுதினாய்
வழி பிறந்தது...
ஆனால்...
பிறர் மஞ்சத்தை பற்றியுமா
எழுத வேண்டும்???
வரன்முறை தேவை உனக்கு...

பளிங்காய் மாறு
நியாயம் முன் நின்றால் மட்டும்
எனினும் ...
அநியாயத்தின் கோர முகத்தையும்
காட்ட மறக்காதே!!

உன் நியாய தராசுகள்
எப்பொழுதும் சமமாகவே இருக்கட்டும்..
லஞ்ச மூடைகளை அதனுள் ஏற்றி விடாதே..!!
நாடும் நாமும் சரிந்து போவோம்!!

உன் பேனாவின் கூர்மையால்
இளையகியம் தீட்டு..
"இலக்கியா" க்களை அல்ல...
பெண்கள் கான சித்திரங்கள்
ரசிக்க மட்டும் தான்..
வருணிக்க அல்ல...

---->sahana

Monday, November 9, 2009

மழை..





.







சாரல் மழை அழகு!!
அடைமழை தூரத்து அழகு...
காலையில் மழை பனித்துளி
நண்பகலில் மழை கவன சிதறல்
நடுநிசியில் மழை கையில் கிடைக்கும் சொட்டு நிலா..

காற்றுக்கு மழை வேகத்தடை
கடலுக்கு மழை ஷவர் குளியல்...
மலைகளுக்கு மழை உரம்..
மனதுக்கு மழை சுகமான ராகம்!!

கவிக்கு மழை தன்னை
பற்றி எழுத தானே வந்த மயங்கடிக்கும் மை
ஓவியனுக்கு மழை இயல்பாய் சித்தரிக்க முடியாத
எட்டா கனி...
காதலர்களுக்கு ஒருகுடை பயணத்திற்கான
பயண சீட்டு...
விவசாயிக்கோ "விளைஞ்ச கொஞ்சத்தையும்
அள்ளிட்டு போயிடுமோ??" என்ற பயம் !!

குழந்தைக்கு முதல் துளி தாயின்
முந்தானை வாசனை...
இரண்டாம் துளி அவளின்
கார பார்வை.... வீட்டுக்குள் அழைக்க
கிழவிக்கோ " எப்பதான் பெஞ்சு ஓய"" சலிப்பின் சுவாசம் !!
ஆனால் இவளுக்கோ மழை
சத்தமா ???? சங்கீதமா???
---குருட்டு சிறுமி..


Saturday, October 10, 2009

nice one

காதலியே
என் கண்ணங்கள்
வறண்ட காடாய் மாறிப்போனது
முத்த மழை சிந்துவாயா
இன்னும் புன்னகை தூரல் ஏனோ

மௌனமே !!

பகலின் மௌனம் இரவு..
குழந்தையின் மௌனம் தூக்கம்..
இறைவனின் மௌனம் இயற்கை
மழையின் மௌனம் இருள் மேகம்
பெண்ணின் மௌனம் நாணம்
காதலில் மௌனம் முதல் முத்தம்
நினைவுகளின் மௌனம் தனிமை
என் மௌனம் நீ!!

Friday, September 25, 2009

Music is love!!

காற்றை அழைத்து வர சொன்னேன்!!
என் வீடு ஜன்னலிடம்!!
அது
காதலை அழைத்து வந்தது!!
இசையை காதலிக்காதவர்கள்
எவரேனும் உள்ளரோ??

-sahana

en varugai!!

உன் தலை முடி கோதிட
காற்றாய் வருகிறேன் அன்பே!!
கண்ணயர்ந்து விடாதே!!
கனவுகளை கலைக்க
காற்றுக்கு உரிமை இல்லை..
-sahana

nilalana naan!!

எல்லோரும் அம‌ர்ந்திருக்கும்
அந்த‌க்கூட்ட‌த்தில்
என்னை ம‌ட்டும்
பார்த்துக்கொண்டிருந்த‌ன‌
அந்த‌ இருவிழிக‌ள்.

த‌ன‌க்கான‌ பார்வையை
என்னிட‌மிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த‌ விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இய‌ல்பாய்
த‌விர்த்தேன்.

எல்லோரும் க‌லைந்து
சென்ற‌ன‌ர்.
வ‌ருட‌ங்க‌ள் ப‌ல
க‌ழிந்த‌பின்ன‌ரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
த‌விர்த்த அந்த‌விழிக‌ளை.

padithathil pidithathu!!

நடுநிசியில் தெருவோர
மரத்தடியில் உறங்குகின்ற
பைத்தியக்காரி
மார்போடு அணைத்திருந்தாள்
பொம்மையொன்றை.
அவளுக்கு பிறக்க
இயலாமல் போனதற்காய்
அப்பொம்மை அழுத
கண்ணீர்தானோ
இந்த இரவுமழை?

a pleasant rain time!!

சிலுசிலுன்னு காத்து..
கனவு மாதிரி கலைஞ்சு போற மேகம் !!
போன நொடி பூத்த பூவ
தொட்டு பாக்கவே வந்து போற சாரல் மழை ...
நனஞ்சுருவோமொனு கொஞ்ச கூட பயப்படாம
சிறகு அடிச்சு பரகுற சிட்டுகுருவி...
இதெலாம் பாத்து சூரியனே கண்ணா மூடி நிக்குரபோ
நம்ம மட்டும் என்ன?
Never miss the beauty of NATURE!!!
Life is damn beautiful..

- sahana

Monday, September 21, 2009

u may be anything!! but i m wat i am...

விண்ணில் பல மாற்றம் ஏற்படலாம்
சூரியன் சுருங்கி போகலாம்...
பகல் நிலவுடன் உலா வரலாம்..
வானிலை மாற்றம் காணலாம்..
மேகங்கள் மலராய் மணம் பரப்பலாம்
நீல வானம் என்றும் நிலையானது!!
நினைவுகள் தடம் புரண்டாலும்..
பெண்மை நிலையானது!!
-sahana

I did too!!

இரண்டு முறை மட்டுமே உன்னை காதலித்தேன்..
ஒன்று!
என் தந்தை காதல் கதை ஒன்றுக்கு
சபாஷ் என்ற பொழுது..
மற்றொன்று!!
உன்னோடு நான் வாழ்ந்தத்தாய்
கனவு கண்டு எழுந்த பொழுது!!

-sahana!!

Thursday, September 17, 2009

Love!!

உன்னுடன் நான்!!



வார்த்தை பரிமாற்ற உன் நட்பு ..
அன்பு பரிமாற்ற உன் காதல் !!
முகம் பார்க்க உன் விழிகள்...
முகம் புதைத்து அழ உன் தோள்!!
என்றும் விலகாத உன் அருகாமை !!
இவை அனைத்தும் என் இறுதி வரை !!!

-Sahana

Friday, September 4, 2009

ரசித்ததில் சில

எதற்கு காதலர் தினம்...



நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..

நீ பார்த்து புன்னகை செய்த நாள்..

உன்னோடு கைக்குலுக்கிய நாள்..

பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..

செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..

நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..

எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..

மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..

உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..

என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..

அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..

எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..

காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..

தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..

நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..

இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..

காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..

உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..

இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..

முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..

செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..

என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..

இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..

தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..

வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..

இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..

நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"

முகம்..

நீ நூலகம்
செல்கையில்
நானும் நூலகம்
வருவது,
சத்தியமாய்
உன் முகம் படிக்க மட்டுமே..

--நிலாப்பெண்..

வாசகி தானே?

உனை வாசித்தப்பின்
முறையாய் நான்
வாசகி தானே?
எனை எப்படி
கவிஞர் ஆக்கினாய்?

--நிலாப்பெண்

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

நிலவாம் நிலவு...





வட்டப் பொட்டு
வச்சாத் தான்
உனக்கு பிடிக்கும்னு
நான் வச்சேன்..
இருட்டினதும்,
ஈனச்சிறுக்கி
வானமும்
வட்டப்பொட்டோட
நிற்கிறாளே

--நிலாப்பெண்..

Friday, August 28, 2009

Some important Websites!!!

Institution Websites:

1. www.annauniv.edu - Chennai Anna University Websites
2. www.annauniv.edu.in - Tirunelveli Anna University Website
3.www.tau.org.in - Tiruchirappalli Anna University Website.
4. www.tndte.com - Technical education.

www.freewarefiles.com
www.filehippo.com
www.4shared.com
www.presentationhelper.co.uk

free websites:

1. www.freewebs.com
2. www.softpedia.com
3. www.filehippo.com
4. www.4shared.com
5. www.annauniv.edu.in
6. www.computerworld.com
7. www.itworld.com
8. www.iconsarchive.com
9. www.downloads.com - Any one software you can download
10. www.proxy.org
11. www.freewarefiles.com
12. www.freebyte.com
13. http://www.proxydom.com/
14. http://www.thefreesite.com/
15. www.w3schools.com
16. www.cuil.com - It is a Search engine at the same in Google.
17. www.innovative-sol.com - To Download in Advance Uninstaller
18. www.zcrack.com - To insert crack file
19. www.erightsoft.com - To convert video files
20. www.sourcecodesworld.com
21. www.1000projects.com
22. www.indianstudycenter.com - To collect Aptitude Questions.
23. www.examblast.com - To Collect Aptitude Questions
24. english download - Norton Antivirus file updated
25. http://www.softjamboree.com/download-Website-Block.html - Web site blocked


ரசனை
-காற்றுக்கு கால்கள் தரும்..
-நிலவுக்கு மேடை அமைக்கும்
- சூரியனையும் உறங்க செய்யும்..
- புல்லுக்கு கூட புடவை அணிவிக்கும்
- எதார்த்தத்தை அலங்கரிக்கும்
நான் ரசித்த சிலவற்றை சுரண்டி எடுக்க முடியாத சிற்ப மாக்கும் ஆசையில்....

உறைய வைக்கும் உலகு !!!!


Tribute to tamills in srilanka..





இது கவிதை அல்ல ....
கவர பட்டு படித்து ரசிக்க .....
கடிதமும் அல்ல..
நலம் விசாரித்து ...
நேசத்தை பரிமாறி கொள்ள..
பிணம் தின்னி கழுகுகள்
மிச்சம் விட்டு வைத்திருக்கும் ...
பிண்டங்கள் தாங்கள் வாழ்ந்ததை
பதிக்கும் பதிவேடு..

"இளகிய மனம் படைத்தோர்
இக்காட்சியை பார்ப்பதை தவிர்க்கவும்... "
என்று ஒளிபரப்ப படும் வாசகமாய்...
தினமும் எங்கள் வாழ்கை அரம்கேரி கொண்டு இருக்கிறது .....

குண்டு வீச்சுகளின் புகைகளின் மத்தியில் காலையை தேடியே படியே..
குடிக்கும் நீரை பெற ...
நீண்ட நெடும் வரிசை ...
அந்த தண்ணீர் பந்தல்
எங்கள் உயிரை குடித்தே... வயிறு வளர்த்தது ...

எங்கள் காலை உணவு
கதறி அழும் பச்சிளம் பிள்ளையின் அழு குரல் ...
தேங்கி கிடக்கும் குருதி வெள்ளம்..
அடுத்த நிமிடம் என் சொந்தமா??? என்ற
ஏக்க பார்வை...
என்று?? தீரும் என் நடை.. என்று கெஞ்சி
நிற்கும் கால்கள்..
பிணங்களை தூக்கி போடாத நாளை
கேட்டு நிற்கும் கைகள்..
இவைகள் மட்டும் தான்...

புன்னகையை எங்கோ பார்த்த நியாபகம் ...
சிந்தித்து பார்த்தேன்..
இறந்து விட்டதாய்...
நினைத்த
தந்தையை..
கண்டதும்.. கட்டி அனைத்த போது...

எங்கள் செடிகள் பூக்கள் பூப்பதையே...
மறந்து போயின...
அன்று பிறந்து அன்றே இறந்து போன பச்சீளம்...
பிள்ளையின்.. நிலை கண்டு..


இங்கு...
பலருக்கு... வேலை.. இல்லை..
பிணங்கள்.. அந்த.. வேலையை பார்ப்பதால்...
கால்களை.. இடரும் வேலை இல்லாத... கற்கள்..
துணிகள் எல்லாம் காயங்களில் கட்டப்பட்டு
இருப்பதால்..
வேலையை இழந்த... நெசவாளி..
இறந்த.. உடல்கள் மண்ணுக்கு உறமாவதால் ....
தன் வேலையை இழந்த... வெட்டியான்...
சில்லா நேரங்களில் பலரின் இதயமும்
தன் வேலையை இழந்து விடுகிறது ...


ஒரே ஒரு ஆசை தான்...
கல்வி கூட வேண்டம்...
உயிர்களை... குண்டு துளைக்காத ..
இடத்தில் புதைக்கும் தொழில் நுட்பம்..
கற்று கொள்ள..

சாதித்தது.. ஒன்று தான்...
செத்து . . கிடக்கும் ..உடல்களை..
செடி மறைவில் ஒளிந்து பார்த்தது..
ஒன்று தான்...

கேட்பதும் ஒன்று தான்...
இறப்பு..இல்லாத...வாழ்வு..அல்ல
வெறும்.. 5 நிமிட அமைதி..
எங்கள் இறப்பிற்கு .. முன்னாவது .....

எந்த நாட்டவன் என்று
இன்னும் அறியாத...
( .......... )

முதல் காதல் !!

.

அன்று தான்
கண்டேன்
வெள்ளை மேகங்களில்
இரவு மிதந்து செல்வதை
உன் கண்களில் ....

உன்னை பார்த்த நொடியில்
புதிதாய் பிறக்க வில்லை ...
இறந்து மீண்டும் பிறந்தேன்..

அமாவாசை இருட்டில்
நிலவு தெரிந்தது ....
சுட்டெரிக்கும் வெயிலில்
பனி துளி கண்டேன்..

புதிராய் வாழ்கை ..
நிதானமாய் நிலை கொலைத்ததது ...

பிறகு என்ன ...
உன்னை சுற்றியே என் பின்பம் ....
உன் மந்திர பார்வையில் ....
மாதங்கள் களித்தேன் ....

நீ தான் என்னவள் ... என்ற வியப்பு ...
நான் தான் உன்னுடயவனா? என்ற தவிப்பு...
தவிப்புகள் தொடர்ந்தன தினமும்..
அன்று மட்டும் என்னவோ..
உன் பார்வையில் புதிய பரிணாமம் ..
பார்வை சாரலை வீசி விட்டு ... மறைந்து கொண்டு இருந்தாய் ....

உன் பார்வையில் இருந்து மீண்டு
கொன்றுந்தேன்..
எட்ட சென்று...
புன்னகைத்த நொடியில்
உணர வைத்தாய் ...நம்.. காதலை...

கண்களால் காதல்
சொன்னதினாலோ??? ஒரு நாள்
என்னை குருடனாக்கி ....
விலகி சென்றாய்...

காதல் பொய்த்து போனது உண்மை தான்
உன் காதல் மட்டுமே..
என் காதல் மாறாமல் இன்னமும் ....
ஒரு ஓரத்தில் பூத்து கொண்டு தான்...
முதலில் கிடைத்த பார்வை...
அனுபவம்...
முதல்.. கனவு...
பார்க்கும்.. இடம் எல்லாம் அவள்...
நான் தேர்ந்து எடுத்த முதல் பெண் ....
முதல் காதலி...
.முதல் காதல் ... வாழ்வில் என்றும்...
மறக்காது...
தோற்றாலும்.....
நினைவுகளில் ...
மலர்ந்து கொண்டு தான் இருப்பாள்...
என் டைரியில் எங்கோ ஒரு ஓரத்தில் அவள்..
பெயரின் கடைசி வார்த்தை ஆகிலும்...
இருந்து கொண்டு தான்,,.. இருக்கும்...
என் எண்பது வயதிலும் ....
---sahana

mudhal kavithai...


எனக்கே என்னை கவிஞனாய் அறிமுகம் செய்தது!!

december 26




andru.....
vidiyarkaalai.....

kadarkarai kaatru mela thaluviya neram....
nee jogging varuvayena ariven nangu...
aanalum andru than thairiyam piranthathu ennaku......


kadhalin malaram rojavai
kaiyil endhiyabadi un varavai nokki
ennai kandathum un vegam kuraiya... nanum pakkam vanthen.........
kadhalin malar kalaraiku sendru vidumo endra bayathudan....

solla thuniyum muun.......
"solli than theriya venduma
" endra un paarvai
kadhalin malarai kadhaliyin malarai matriyathu......

un "aam" endra otrai sol en valkaiyil puthu atthiyayathai koduthathu.....



mudhal parisu.....
muuthuku uyir kodutha sippiyai
kadhaliku parisalika enni viranthen......
aanal....

thirumbi varuhayil....
nan kandathu aval kangalai alla....
nan kodutha malar karai othungiyathai....


kaneeerudan athai edutha pothu..
athu sonathu....

"nee avalukaha
kadarkaraiyil sippi eduka sendraii..
aanal....
avalo unnakaha
sippi uyir kodutha muthai eduka
aval kadalukule sendru vitaal......"

endru...


pinbu than purinthathu...
nan eduthu vanthathu verum sippi alla
avalukaha edutha tajmahal endru....




tsunami palla vailahalai matum alla
engal kadhal valaihalayum
than eduthu sendru vitathu....
aanalum
avalum maraiya villai
engal kadhalum maraiya villlai
marainthathu... en siripalaihal than....


kondada pada mudiyatha
en tajmahalin pirantha naal
december 26
avalin
vaalvin kadaisi naal
nan vaalntha naal kooda athumatum than...


endrum ninaivuhalludan..
........ hannah